crossorigin="anonymous">
பிராந்தியம்

கரைதுறைப்பற்றில் “சமுர்த்தி அபிமாணீ விற்பனைக் கண்காட்சி”

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்று (11) முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலகங்களின் ஒழுங்கமைப்பில் விற்பனைக் கண்காட்சி நடைபெற்றது.

கரைதுறைப்பற்று பிரதேச சமுர்த்தி அபிமாணீ விற்பனைக் கண்காட்சியானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் கலந்து சிறப்பித்ததுடன் விற்பனைக் கண்காட்சியினை திறந்து வைத்தார்.

உள்ளுர் உற்பத்தியினை மேம்படுத்தும் நோக்கிலும் , உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலும் , அவற்றை விளம்பரப்படுத்தும் நோக்கிலும் இந்த விற்பனைக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம்), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன்(காணி) , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − = 13

Back to top button
error: