ஒட்டறுத்த குளத்தின் நீர்ப்பாசன தொகுதி புனரமைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கில் ஒட்டறுத்த குளம் கிராம காமக்கார அமைப்பினரின் வேண்டுகோலுக்கிணங்க றகமா நிறுவனத்தினரால் மந்தை கிழக்கு பிரதேச செயலாளரின் அனுமதியுடன் கமநல சேவை திணைகளத்தின் ஆலோசனையுடன் ஒட்டறுத்த குளத்தின் நீர்ப்பாசன தொகுதி நேற்று (28) புனரமைக்கப்பட்டது.
இச் செயற்றிட்டத்திற்காக குறித்த நீராப்பாசன தொகுதியினை பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்ளும் குடும்பங்களின் மனித வலு பயன்படுத்தப்பட்டு அவர்களுக்கான உலருணவு பொருட்கள் றகமா நிறுவனத்தால் வழங்கி வைக்கப்பட்டது.
உணவிற்கான வேலைத்திட்டத்தின் கீழ் தேவைப்பாடுடைய 40 குடும்பங்களுக்கான உணவுப் பொதிகளே இவ்வாறு வழங்கப்பட்டது.
40 ஏக்கர் நிலப்பரப்பிற்கான நிரினை தடையின்றி வளங்குவதன் ஊடாக 60 000 கிலோகிராம் நெல் உற்பத்தியினை ஊக்குவிப்பதன் நோக்காகக் கொண்டு இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.