உள்நாடுபிராந்தியம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் (O+) வகை குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதி ராஜா தெரிவித்துள்ளார்.
தற்போது வைத்தியசாலைக்கு (O+) குருதி தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே குறித்த (O+) வகை இரத்தம் தானம் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையை நாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏனைய வகை இரத்தம் காணப்படுகின்றது.எனினும் (O+) குருதி தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
எனவே அவசரமாக குறித்த வகை இரத்த தானம் செய்ய விரும்பு கின்றவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையை நாடுமாறு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதி ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.