ஏறாவூரில் மத்தியஸ்த சபைக்கு புதிய உறுப்பினர்கள்

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் மத்தியஸ்த சபைக்கு புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கல் நிகழ்வானது நேற்று (18) மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவு மத்தியஸ்த சபைக்காக தெரிவு செய்யப்பட்ட 33 மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த மத்தியஸ்த சபைக்கு முதன் முறையாக 7 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை முதன் முறையாக ஓய்வு பெற்ற அதிபரான பஹியா அப்துல் காதர் எனும் பெண்ணொருவர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந் நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத், செயலகத்தின் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எம்.ஹன்சுல் சிஹானா மாவட்ட மத்தியஸ்த சபைகள் பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். ஆஸாத், மத்தியஸ்த சபைகள் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சாந்த தர்மினி உட்பட இன்னும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.