crossorigin="anonymous">
உள்நாடுபொது

“பொது மக்களே அவதானம்” பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி

சமூக வலைத்தளங்களில் தற்போது பகிரப்படும் தகவல், பொலிஸ் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட செய்தியல்லவென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

“அனைவரும் படிக்க வேண்டிய பொலிஸ் செய்தி – பொருளாதார நெருக்கடியில் ஜாக்கிரதை” என 22 விடயங்கள் உள்ளடக்கப்பட்டு, இறுதியில் அவதானமாக இருங்கள் – பொலிஸ் திணைக்களம் என இந்த போலி தகவல் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

ஊடகங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ அவ்வாறான செய்தி எதுவும் வழங்கப்படவில்லை எனவும், பொலிஸார் ஒரு விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்க விரும்பினால், ஊடகப் பிரிவிலிருந்து ஊடக அறிவித்தலை வெளியிடுவதாகவும் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த போலி செய்திகளுக்கு ஏமாற வேண்டாமென பொதுமக்களை அறிவுறுத்தி வரும் ஊடகப் பேச்சாளர் அலுவலகம், போலி செய்திகளை வெளியிட்ட நபர்களை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென குறிப்பிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 + = 35

Back to top button
error: