crossorigin="anonymous">
உள்நாடுபொது

அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு புதிய விடயதானங்கள்

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு புதிதாக வழங்கப்பட்ட தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சின் விடயதானத்தின் கீழ் இலங்கை தரநிர்ணய நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், உள்வாங்கப்பட்டு, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (03) குறித்த அமைச்சுப் பதவி வழங்கப்பட்டதோடு, அன்றைய தினம் திகதியிடப்பட்ட குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி செயலக விடயதானங்களிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், 12 புதிய விடயங்கள் கொண்ட குறித்த பட்டியலில் கொழும்பு துறைமுக நகரபொருளாதார ஆணைக்குழு, முதலீட்டு சபை மற்றும் கொவிட்-19 அமைச்சுகளின் செயலணி உள்ளிட்ட பல செயலணிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 20 − = 10

Back to top button
error: