crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

யாழ் வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சை மருந்து தபால் மூலம்

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை களத்தில் வைத்திய (கிளினிக் சிகிச்சை) சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்கள் இன்றிலிருந்து (05) தபால் மூலம் அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலை சிகிச்சை களத்தில் வைத்திய சேவை பெறும் நோயாளர்கள் தற்போது நாட்டில் நிலவும் அதிகரித்த கொரோனா தொற்று தாக்கத்தின் காரணமாக பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

எனவே இன்றிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறும் நோயாளர்கள் தமக்குரிய மருந்துப் பொருட்களை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் தபால் மூலம் வீடுகளில் இருந்தவாறு தமக்குரிய மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 6

Back to top button
error: