crossorigin="anonymous">
உள்நாடுபொது

கிளிநொச்சி புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதி திறந்து வைப்பு 

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி நேற்று (27) திறந்து வைக்கப்பட்டது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களது பங்கேற்புடன் நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய அலி சப்ரி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது

நிகழ்வில் மத குருமார்கள் நீதி அமைச்சின் செயலாளர், மாகாண பிரதம செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள், அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள், இராஜாங்க அமைச்சின் செயலாளர், உயர் நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதி மற்றும் சட்டத்தரணிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர் .

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 93 − = 89

Back to top button
error: