crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

“பிரஜா ஹரித அபிமானி” திட்டத்தின் கீழ் இறாக்காம த்தில் மரக்கன்று நடல்

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான பசுமையான தேசத்தினை உருவாக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பிரஜா ஹரித அபிமானி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மரநடுகை திட்டம் இன்று (21) இறக்காமம் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நீர் மூலங்களை பாதுகாத்தல் மற்றும் கிராமங்களை அழுகுபடுத்தி பசுமையான இலங்கையை கட்டியெழுப்பும் வகையில் ஜனாதிபதியினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் ஊடாக இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதன் அம்பாரை மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு மாவட்ட தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களப் பொறுப்பதிகாரி எம்.எல். முஸப்பிர் அவர்களின் ஏற்பாட்டில் இன்று இறக்காமம் 02 ஆம் கிராம சேவகர் பிரிவு குடுவில் அல்-ஹிறா வித்தியாத்தில் கல்லூரி அதிபர் எம்.ஏ.பஜீர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் (பதில்) திரு. வேதநாயகம் ஜெகதீஸன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

விஷேட அதிதிகளாக பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். ஜெமீல் காரியப்பர், பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) ஆகியோர் நிகழ்வின் பங்கேற்றனர். சிறப்பு அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் அவர்களும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜெமீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், பிரிவுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் எம்.ஜே.எம் அத்தீக் உட்பட சமூக மட்டக் குழுக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், பிரதேச மட்ட அமைப்புகளுக்கும் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டன.

2023ஆம் ஆண்டளவில் அம்பாரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்கள அம்பாரை மாவட்ட பொறியியலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 69 = 74

Back to top button
error: