crossorigin="anonymous">
உள்நாடுபொது

கைக்குண்டு வெடித்ததில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவு இக்பால் நகரில் இன்று (12) மாலை கைக்குண்டொன்று வெடித்ததில் 15 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

ஆடுகளின் உணவுக்காக இலை, குழைகள் வெட்டச் சென்ற சிறுவன் புதர் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த கைக்குண்டு கத்தி பட்டு வெடித்ததில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது

உயிரிழந்தவர் தோப்பூர்-அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஹபீஸ் நளீம், 15 வயது எனத் தெரியவந்து, சிறுவனின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 84 − 82 =

Back to top button
error: