உள்நாடுபொது

கொவிட் கால முன்னெச்சரிக்கை இலவச வழிகாட்டல் நிகழ்வு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் இந்திய மணிப்பால் வைத்தியசாலை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘கொவிட் கால முன்னெச்சரிக்கைகள்’ எனும் தொனிப்பொருளிலான இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று 05ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 07.00 மணிக்கு இடம்பெறவுள்ளது

துறைசார்ந்த வளவாளர்களால் நடாத்தப்படும் இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில், விசேடமாக ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்ள முடியும்.

ஒன்லைன் மூலமாக இடம்பெறும் இந்நிகழ்ச்சிக்கு மட்டுப்படுத்தப்பட்டவர்களே இணைத்துக் கொள்ளப்பட இருப்பதால் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் முன்கூட்டியே தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

கலந்து கொள்ள கீழே உள்ள இணைப்பின் மூலம் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவித்துள்ளது https://forms.gle/Y4HWTUELeDkSr9Q1A

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Back to top button
error: