crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாத்ததும்பறை தொகுதிக்கான மத்தியஸ்த சபை அங்கத்தவர் நியமனம்

(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)

கண்டி மாவட்ட பாத்ததும்பறைத் தொகுதிக்கான மத்தியஸ்த சபை அங்கத்தவர்களாக புதிதாக 30 பேருக்கு நியமனங்கள் (15) வழங்கப்பட்டன.

இவ் வைபவம் பாத்ததும்பறை பிரதேச செயலாளர் திருமதி. தக்சிலா வீரகோன் தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நியமனங்கள் நீதி அமைச்சின் கீழுள்ள மத்தியஸ்த சபை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இடம் பெற்ற எழுத்து மூல போட்டிப் பரீட்சையில் தமிழ் மொழி பேசும் பின்வரூவோர் சித்தியடைந்து தெரிவாகியுள்ளனர். வத்துகாமத்தைச் சேர்ந்த எஸ். சிவநாதன், மடவளையைச் சேர்ந்த ஜே.எப். றஹ்மான், கே.எம்.இஸ்கந்தர், எம்.எம். றம்சான், மற்றும் ஜே.எம்.ஹாபீஸ், உடதலவின்னயைச் சேர்ந்த மொகமட் பசீர். மற்றும் எம். மர்சூக் ஆகியோராகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 71 − 65 =

Back to top button
error: