crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

உதவி வழங்குநர்கள் பிரதேச, மாவட்ட செயலகத்தை தொடர்பு கொண்டு வழங்குங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போதைய நிலையில் உதவித் திட்டங்களை வழங்குகின்றவர்கள் குறித்த பகுதி கிராம அலுவலர் அல்லது பிரதேச செயலாளர் அல்லது மாவட்டச் செயலாளர் உள்ளிட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு உதவித் திட்டங்களை வழங்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போதைய நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மனித நேயம் கொண்ட நிறுவனங்கள் உதவி வருகின்றன. சில இடங்களில் கிராம சேவகர், பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் என்ற தொடர்பாடல் செயன்முறையூடாக ஒருங்கிணைக்கப்பட்ட விதத்தில் உதவிகளை வழங்கி வருகின்றன.

சில இடங்களில் குறிப்பாக மக்கள் அமைப்பினரால் இவை மீறப்பட்டு உதவிகள் வழங்கப்படுகின்றன. இவை குறித்து பிரதேச செயலகத்திற்கோ மாவட்ட செயலகத்திற்கோ தெரியாது. இவை நிறுத்தப்பட்டு ஒருங்கமைக்கப்பட்ட வழியினூடாக செல்வதனூடாக இரட்டிப்புத்தன்மையிலான உதவிகளை பெறல் மற்றும் மக்கள் ஒன்று கூடுவதால் தொற்று பரவுவதற்குரிய வழிவகைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே அரச சார்பற்ற நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரணம் வழங்குவதில் விருப்பமிருப்பின் பிரதேச செயலகம் ஊடாக மாவட்ட செயலகத்தை தொடர்பு கொள்கின்ற ஒழுங்கமைப்பு தேவைப்பாடுகிறது. இது மீறும்போது தொற்று அதிகரிப்பு ஏற்படுவதற்கு நீங்கள் உடந்தையாக இருக்கக் கூடாது என்பதை வினயமாக கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 81 − = 74

Back to top button
error: