crossorigin="anonymous">
ஆக்கங்கள்உள்நாடுபொது

தென்கிழக்கு பல்கலைக்கழக 25 வருட பூர்த்தி வெள்ளி விழா சிறப்பிதழ் வெளியீடு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 25 ஆவது வருட பூர்த்தி வெள்ளி விழாவினை முன்னிட்டு “மெட்ரோ லீடர்” பத்திரிகை 110 ஆவது விசேட சிறப்பிதழ் ஒன்றினை நேற்று (28) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

இச் சிறப்பிதழினை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசியர் றமீஸ் அபூவக்கர் வெளியிட்டு வைத்தார்.

ஊடகவியலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் தலைமையில் உப வேந்தர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம்.பௌசர், மெட்ரோ லீடர் குழுமத்தைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.ஸாகிர், எம்.எம்.ஜபீர், நூருல் ஹூதா உமர், எம்.வி.எம்.றின்சான், எம்.என்.எம்.அப்றாஸ், ஏ.எச்.எம்.ஹாரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 70 = 78

Back to top button
error: