crossorigin="anonymous">
உள்நாடுபொது

தீப்பற்றியுள்ள கப்பலிலிருந்து இரசாயனப் பொருட்கள் கரையொதுங்க தொடங்கியுள்ளன

இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கருகாமையில நங்குரமிட்டுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் பரவிய தீ வேகமாக கப்பலில் பரவிவரும் நிலையில் ,கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரசாயனப் பொருட்கள் தற்சமயம் நாட்டின் கரையோர பிரதேசத்தை நோக்கி அடித்துச் செல்லபடுவதும் பிரதேசவாசிகள் அவற்றை எடுத்துச் செல்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனால் திக்கொவிற்ற தொடக்கம் சிலாபம் வரையிலான கரையோரத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.

வெள்ளவத்தையில் இருந்து பாணந்துறை கடற்கரை வரையிலும் இந்த பாகாப்பு நடவடிக்கை மேற்கொள்ப்பட்டுள்ளது.

கரைக்கு வரும் இந்த பொருட்களில் இரசாயன கலவைகள் இருக்கலாம் எனசமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 70 − = 62

Back to top button
error: