crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

நபி முஹம்மத் (ஸல்) அவர்களது ஜனன தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள (19) மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

“அனைவரதும் நம்பிக்கைக்குரியவராக மாற வேண்டுமெனில், கருணை மற்றும் நேர்மை என்பன அவசியமென்று உலகுக்கு சுட்டிக்காட்டிய முஹம்மத் நபி அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.

எந்தவொரு சமூகத்திலும் வாழ்கின்ற மனித குலத்தின் சிந்தனை மற்றும் நடத்தை என்பவற்றின் அடிப்படையாக அமைவது, அவர்கள் நம்பிக்கைக் கொண்டு ஏற்றுக்கொள்கின்ற ஆழமான மார்க்கமே ஆகும்.

இறைவன் நேர்மையுள்ள மனிதர்களுக்கு கருணை காட்டுவதோடு, அவ்வாறான மனிதர்களுக்குத் தகுதியான உயர் அந்தஸ்த்து வழங்கப்படுவதை, முஹம்மத் நபி அவர்களின் வாழ்க்கை மற்றும் முன்மாதிரியான நடத்தை என்பவற்றை ஆழமாகக் கற்கும்போது விளங்கிக்கொள்ள முடிகிறது.

இலங்கை உட்பட உலகவாழ் அனைத்து முஸ்லிம்களினதும் கௌரவத்துக்குரிய முஹம்மத் நபி அவர்களின் வழிகாட்டல்களை மேலும் சமூகமயப்படுத்தி ஒற்றுமையை உருவாக்குவதே முஸ்லிம்கள் நபி அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய விசேட கௌரவமாகும் என்று நான் நினைக்கின்றேன்.

அவர்களின் வாழ்வு முழுவதும் மனித நலனைக் கருத்திற்கொண்டு கடைபிடித்து வந்த குணாம்சங்களை, ஏனைய காலங்களை விடவும் தற்போதைய சூழ்நிலையிலேயே சமூக நலனை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்துவது பொருத்தமானதாக அமையும்.

இன்றும், உலக மக்களின் மரியாதைக்குரிய நபி அவர்களின் வாழ்க்கை வழிகாட்டல்களை கௌரவத்துடன் பின்பற்றி வருகின்ற இலங்கை முஸ்லிம்கள் உட்பட உலகவாழ் முஸ்லிம்களின் வாழ்க்கையில் சுபீட்சமும் சௌபாக்கியமும் உருவாக வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 35 − = 29

Back to top button
error: