crossorigin="anonymous">
உள்நாடுபொது

வன்செயல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் வணக்கஸ்தலங்களுகு நட்டஈட்டு

இலங்கையில்  பயங்கரவாத வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான நட்டஈட்டு காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று (15) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இளப்பீடுகளுக்கான தேசிய செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான நட்டஈட்டுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபோ மண்டபத்தில் இடம்பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் இம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக முன்னால் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் கலந்துகொண்டிருந்ததுடன், பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான நட்டஈட்டுக்கான காசோலைகளையும் வழங்கி வைத்தார்.

இதன்போது மண்முனை வடக்கு, மண்முனை மேற்கு, மண்முனை தென்மேற்கு, போரதீவுப்பற்று மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் பாதிக்கப்பட்ட 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட 30 நபர்களுக்கும் 5 வணக்கஸ்தலங்களுக்குமான 2,058,901 பெறுமதியான நஸ்ட ஈட்டுக் காசோலைகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கென மொத்தமாக 9,678,646 ரூபாய் நிதி ஒதுக்கீடு இதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்களான செல்வி.இ.ராகுலநாயகி, எஸ்.சுதாகர் மற்றும் உ.உதயஸ்ரீதர் மண்முனை வடக்கு பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன் மற்றும் மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் காசோலைகளையும் வழங்கி வைத்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 73 − 70 =

Back to top button
error: