crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்பொது

புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது

புத்தளம் – இறால் மடு பிரதேச்திலுள்ள குளமொன்றில் குளித்து விட்டு புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் எழுவான் குளம் நோக்கி கெப் ரக வாகனத்தின் பயணித்தபோது கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

நகர பிதா கே.ஏ. பாயிஸின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

“நகர பிதா பாயிஸ் பலத்த காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் பி.ப 7.00 மணியளவில் இவர் உயிரிழந்ததை வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து பாயிஸின சாரதி உள்ளிட்ட மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்” என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்

கைது செய்யப்பட்டுள்ள மூவரும் மதுபோதையில் இருந்த விடயம் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − = 15

Back to top button
error: