உள்நாடுபிராந்தியம்

மாந்தை மேற்கு பிரதேசத்தில் சட்ட விரோத முறையி மண் ஏற்றிச் சென்ற 8 சாரதிகள் கைது

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முதலியார் கமம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை (17) இரவு சட்ட விரோதமான முறையிலும், அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியும் மண் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் மற்றும் 5 உழவு இயந்திரங்கள் இலுப்பை கடவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, 8 சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 சாரதிகளும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு  எதிர் வரும் 22 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட மணல் மற்றும் வாகனங்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதோடு, அன்றைய தினம் குறித்த 8 சாரதிகளும் மன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: