உள்நாடுபிராந்தியம்

பலாங்கொடை கோவிட் செயலணி பலாங்கொடை வைத்தியசாலைக்கு ‘Pulse Oximeter’ அன்பளிப்பு

(நதீர் சரீப்தீன்)

இரத்தினபுரி – பலாங்கொடை கோவிட் தடுப்பு செயலணியின் பல்வேறு பணிகளில் ஒன்றாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு Oximeter அன்பளிப்பு (14) செய்யப்பட்டது

இரத்தினபுரி – பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபையின் அனுசரணையின் கீழ் இயங்கிவரும் பலாங்கொடை கோவிட் தடுப்பு செயலணி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக முன்னேற்ற சேவை நடவடிக்கைகள் பலவற்றை முன்னெடுத்து செயற்பட்டு வருகின்றன.

பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சேவையாற்றிவரும் வைத்தியர்களான எம்.ஜி.சாகிர், என்.ரபாய்தீன் போன்றவர்கள் இணைந்த வைத்திய குழுவினரின் விஷேட வழிகாட்டல்களுடன் மேற்படி கோவிட் தடுப்பு செயலனி இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய கொரோனா தீவிரமாக பரவிவரும் சூழ்நிலையில் மக்களின் சுவாச நிலையை அறிந்துகொள்வதற்கும் அதற்கமைய அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் ஏதுவாக அமையும் என்ற வகையில் 40 Pulse Oximeter களை கொள்வனவு செய்து அதில் 20 Oximeter கள் முதற் கட்டமாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: