உள்நாடுபொது

“வன்முறையற்ற தொடர்பாடல் மற்றும் ஊடகத்தின் பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவித்தல்”

இலங்கை, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் வன்முறையற்ற தொடர்பாடலை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கான “வன்முறையற்ற தொடர்பாடல் மற்றும் ஊடகத்தின் பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவித்தல்” (Nonviolent Communication and responsible use of media) இணையவழி (Zoom) ஊடாக செயலமர்வு நடைபெற்றது

இச் செயலமர்வு கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றதுடன் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ, சமூக விஞ்ஞான மற்றும் மானிடவியல் பீடம் இதனை ஏற்பாடு செய்திருந்தது

இலங்கை முழுவதிலும் உள்ள 50 ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் செயமர்வில் கலந்து கொண்டதுடன் முதற் தடவையாக தமிழ் மொழியில் இடம்பெற்ற செயலமர்வு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் நான்காவது தொகுதியினருக்கானதாகும்

நிகழ்வில் வளவாளர்களாக ‘வன்முறை சாரா தொடர்பாடல்’ எனும் தலைப்பில் வன்முறையற்ற தொடர்பாடலில் சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளரான ரமானுஷா பூபாலரத்னமும், ‘ஊடகத்தின் பொறுப்பான பயன்பாடு’ எனும் தலைப்பில் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். சதீஸ் மோகன் ஆகியோர் பங்குபற்றினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: