உள்நாடுபொது

இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் கடமையேற்பு

இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் தனது கடமைகளை இன்று (15) பொறுப்பேற்றுக் கொண்டார்.

தனது இராஜாங்க அமைச்சுபதவியை நேற்று முன்தினம் (13) இராஜினாமா செய்துள்ள அஜித் நிவார்ட் கப்ரால், இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து, தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவார்ட் கப்ரால், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும் சுமார் 9 மாதக் காலப்பகுதி வரையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: