crossorigin="anonymous">
அறிவியல்

‘இரண்டு, மூன்று வாரங்களுக்கு ஒரே முகக்கவசம் அணிந்தால் கருப்பு பூஞ்சை ஏற்படலாம்’ – பேராசிரியர் டாக்டர் பி சரத் சந்திரா

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருவதோடு உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து இந்த நோயை அறிவிக்கப்படவேண்டிய நோயாக பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசும் இந்த நோயை கையாளுவதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் இரண்டு, மூன்று வாரங்களுக்கு ஒரே முகக்கவசத்தை அணிந்தால் கருப்பு பூஞ்சை ஏற்படலாம் என எய்ம்ஸின் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் பி சரத் சந்திரா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர், “பூஞ்சை தொற்று பாதிப்புகள் புதிதல்ல. இருப்பினும் தொற்று நோய் என கூறக்கூடிய அளவிற்கு பூஞ்சை பாதிப்புகள் ஏற்பட்டதில்லை. ஆனால் அதுபோல் வருவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம். கட்டுப்பாடற்ற நீரிழிவு, டோசிலிசுமாப் மருந்துடன் ஸ்டெராய்டுகளின் பயன்பாடு, வென்டிலேட்டர்களில் இருப்பவர்கள் கூடுதல் ஆக்சிஜனை எடுத்துக்கொள்வது ஆகிய காரணிகளில் எதாவது ஒன்று இருந்தாலும் கருப்பு பூஞ்சை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது” என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், “சிலிண்டரிலிருந்து நேரடியாக குளிர்ந்த ஆக்சிஜனைக் கொடுப்பது மிகவும் ஆபத்தானது. அதேபோல் 2-3 வாரங்களுக்கு ஒரே முகக்கவசத்தை அணிவது கருப்பு பூஞ்சை ஏற்பட வழிவகுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 55 + = 64

Back to top button
error: