crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

குடிதண்ணீர் பிரச்சனை ஏற்படுடின் உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்- கரைதுறைப்பற்று பிரதேச சபை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள் முடக்கப்படுகின்றபோது அல்லது குடும்பங்கள் தனிமை படுத்தப்படுகின்றபோதோ குடி நீர் பிரச்சினை ஏற்படுமாயின் அதனை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.விஜிந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் குடிதண்ணீரை பெற்றுக்கொள்வதாக இருந்தால் வட்டார உறுப்பினர்கள் அல்லது உப பிரதேச சபை பொறுப்பதிகாரிகளுடன் குறித்த கிராம அலுவலர்கள் தொடர்புகொள்ளும் வேளையில் இலவசமாக குடி நீரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று பொலீஸ் பிரிவுகளை உள்ளடக்கிய கரைதுறைப்பற்று பிரதேசம் காணப்படுகின்றது. 46 கிராம சேவை பிரிவுகளை கொண்ட பிரதேசத்தில் 13,280 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஆடைத் தொழில்சாலையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள் என 21ம் திகதி வரை 88 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 27 − 23 =

Back to top button
error: