crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை – கென்யா ஜனாதிபதிகள் தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் கென்யா ஜனாதிபதி உஹுரு முயிகயி கென்யாட்டா (Uhuru Muigai Kenyatta) அவர்களுக்கும் இடையில், நேற்று (03) தொலைபேசி ஊடாக சுமூகக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு பலமாகியுள்ளமை தொடர்பில் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்ட இரு நாடுகளின் தலைவர்களும், இவ்வொற்றுமையை மேலும் பலப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் அவதானம் செலுத்தினர்.

இரு தலைவர்களும், உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்த கருத்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் தாம் நெருங்கியத் தொடர்புகளைப் பேணியதாக எடுத்துரைத்த கென்யா ஜனாதிபதி அவர்கள், இரு நாட்டு மக்களின் நலனுக்காக, இலங்கை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணத் தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

கிழக்கு ஆபிரிக்காவின் மிக முக்கிய நாடாக விளங்கும் கென்யா, இலங்கையுடன் சிறந்த நட்புறவைப் பேணும் நாடாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரகத் தொடர்புகளின் 50 வருடப் பூர்த்தி, 2020இல் முழுமையடைந்ததோடு, பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் அரசியல் ரீதியிலான தொடர்புகள், இரு தரப்புக்கும் இடையில் புதிய உயர் நிலையை எட்டியுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 − 28 =

Back to top button
error: