
மத்திய மாகாணத்தில் அதிகரித்துவரும் கொவிட் தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
மத்திய மாகாணத்தில் ஆகக்கூடுதலானவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கண்டி மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் மொடர்னா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கும் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
கண்டி மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தல்வத்த, பூர்ணவத்த மேற்கு, பூர்ணவத்த கிழக்கு, மேல்-கட்டுக்கலை, கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நேற்று கண்டி புஷ்பதான கல்லூரியில் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
இதன் பிரகாரம், நேற்று முனதினம் 24 மணி நேரத்தில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 645 ஆகும். இவர்களில் மாத்தளை மாவட்டதைச் சேர்ந்த 283 தொற்றாளர்களும், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 238 தொற்றாளர்களும், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 124 தொற்றாளர்களும் உள்ளடங்குகிறார்கள்.
மத்திய மாகாணத்தில் இதுவரை காலமும் கொவிட் உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்தை 767ஐ எட்டுகிறது. இங்கு பதிவான மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 300ஐத் தாண்டுகிறது.