crossorigin="anonymous">
உள்நாடுபொது

இரத்தினபுரி வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட 60 பேருக்கு கொரோனா

(நதீர் சரீப்தீன்)

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட இதர காரியாலய ஊழியர்கள் 60 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அனோஜ் ரொட்ரிகோ (25) தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்

“அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் நாளாந்தம் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர் தொற்றாளர்களில் பெரும்பாலானோருக்கு ஒக்சிசன் குறைபாடு காணப்படுகிறது அதற்கான சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எமது இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்காக எட்டு வாட்டுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது இதில் குழந்தைகளுக்காக ஒன்றும். பெண்களுக்காக ஒன்றும் உள்ளடங்கும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் கொரோனா தொற்று சம்பந்தமாக இரத்தினபுரி மாவட்ட தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பிரதானி லக்மால் கோணார கருத்து தெரிவிக்கையில்

“தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவும் ஒரு வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளமையால் இதிலிருந்து பாதுகாப்பு பெற உரிய சுகாதார வைத்திய ஆலோசனைகளைப் பேணி வருதல் கட்டாயமாகும். முடியுமான வரையில் வீட்டை விட்டு வெளிவருவதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். தொற்றியிருந்தது தப்புவதற்கு எமது பாதுகாப்பை நாமே உறுதி செய்துகொள்ள வேண்டும்.” என்றும் குறிப்பிட்டார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 58 − 52 =

Back to top button
error: