உள்நாடுபிராந்தியம்
கல்முனை மாநகர சபை பிரிவில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை திடீர் சுற்றிவளைப்பு

அம்பாறை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை பொறுப்பதிகாரியின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியினுள் உள்ள பல வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இச்சுற்றிவளைப்பானது பொருட்களை விற்பனை செய்யும்போது நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது, மேலதிக கட்டணங்களை அறவிடுவது, மற்றும் பொருட்களை பதுக்கி வைத்தல் போன்ற பொதுமக்களினால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து மேற்கொள்ளப்பட்டது.
இச்சுற்றிவளைப்பின்போது சில வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மேலும் பல வியாபார நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன.