crossorigin="anonymous">
உள்நாடுபொது

தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு கொரோனா வைரசு பரவுதல் 65 வீதத்தால் குறைவு

தடுப்பூசி இரண்டையும் ஏற்றிக் கொண்டவர்களின் உடம்பில் கொரோனா வைரசு பரவும் தன்மை 65 வீதத்தால் குறைவாகுமென ஆய்வு ஒன்றிவில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு உயிரியல் சார்ந்த ஆய்வு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவாந்தர மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

88 மாதிரிகளை அடிப்படையாகக்கொண்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், அவற்றில் 84 டெல்டா வகை தொடர்புடைய மரபணு பகுப்பாய்வாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக கூறினார்.

கொழும்பு , மஹரகம ,மாலபே, வவுனியா ,இரத்தினபுரி, கம்பஹா, கண்டி, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் இவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 53 = 58

Back to top button
error: