
காத்தங்குடியில் சர்வமத தலைவர்கள் பங்கு பற்றிய இன ஐக்கிய இஸ்லாமிய புதுவருடமும் முஹரம் நிகழ்வு நேற்று முன்தினம் சொவ்வாய்கிழமை (10) மாலை நடைபெற்றது.
காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டல்களுக்குமான ஆலீம்கள் அமைப்பின் ஏற்பாட்டில் புதிய காத்தான்குடி அல் ஹக்ஷா ஜும்ஆ பள்ளிவாயலில் இந்நிகழ்வு நடை பெற்றது.
இன ஐக்கியத்தை மேம்படுத்தும் வகையில் இஸ்லாமிய புது வருடத்தை வரவேற்கும் நிகழ்வாக அமைந்திருந்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட சர்வமத அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள் உள்ளிட்ட சர்வமத தலைவர்களும் இதன்போது கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.