crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பதவியேற்பு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் இன்று (09) திங்கட் கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் பதவியேற்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கும் இவர் தென்கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர் என்பது சிறப்பம்சம்.

மாணவராக இருந்து, உதவி விரிவுரையாளர், விரிவுரையாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் என பல்வேறு பதவிகளை வகித்த இவர் கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதியாக இறுதியாக கடமையாற்றியிருந்தார்.

இவர் தென்கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர் என்பதுடன் சாய்ந்தமருதை சேர்ந்த பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் இள வயதில் (43 வயது) பல்கலைக்கழக உபவேந்தராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் கொரோனா சூழ்நிலை காரணமாக குறித்த சில பேரவை உறுப்பினர்களும், பல்கலைக்கழக மூத்த நிர்வாகிகள், பீடாதிபதிகள், சில முக்கிய பேராசிரியர்கள்  கலந்து கொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 64 + = 68

Back to top button
error: