crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

‘சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துகொள்ள முககவசம் அணியாது பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்’ – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

வைத்தியசாலைகளில் தற்போது பாரிய இடப்பற்றாக்குறை

பொதுமக்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துகொள்வதற்காக மட்டுமே முககவசம் அணியாது தங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் பொருட்டு பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தற்போது யாழ் மாவட்ட கொரோனா நிலைமைதொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முகமாக கருத்து தெரிவிக்கும்போதே யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

“யாழ்மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் சற்று அதிகரித்து செல்லும் நிலையை காணப்படுகிறது.பொதுவாக வட மாகாணத்தில் அதிகரித்து செல்லும் போக்கு காணப்படுகிறது.
ஆகவே நாம் அனைவரும் இச்சந்தர்ப்பத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும். பொதுமக்களை இக்கொடிய தொற்றிலிருந்து பாதுகாக்கவே இவ் பயண கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டன.ஆனால் பொதுமக்கள் அலட்சியமாக போக்கில் செயல்படுவதை காண முடிகிறது.

வைத்தியசாலைகளில் தற்போது பாரிய இடப்பற்றாக்குறை காணப்படுகிறது. இடை நிலை பராமரிப்பு நிலையங்களை ஆரம்பித்தோம். அவை கூட தற்போது நிரம்பும் நிலை காணப்படுகிறது.
இத்தொற்றானது தற்போது ஊடுருவி பொதுமக்கள் அரசாங்க மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என பலரையும் பாதித்துள்ள நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் அரச அலுவலகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.
இச்சூழ்நிலையில் பொதுமக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.இத்தொற்றால் சுகாதார பணியாளர்கள் கூட பாதிக்கப்பட்ட நிலைமை காணப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் தமது அலட்சிய போக்கில் இருந்து தொற்றை ஏற்படுத்த காரணமாக இருந்து அவர்களை எதிர்காலத்தில் பராமரிக்க கூட இயலாத சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டாமென பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்.

இந்நிலைமையினை நாம் கட்டுப்பாடான இருந்தால் மட்டுமே தவிர்க்க முடியும். எனவே விதிக்கப்பட்டுள்ள பயணத்தடைகள் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இதில் ஒவ்வொருவரதும் தனிப்பட்ட கடப்பாடும் உண்டு. எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் இவற்றை சமாளிப்பது சிக்கலான நிலையை ஏற்படுத்தும் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

மிக மிக அத்தியாவசியமாக தேவைக்கும் மற்றும் அலுவலக கடமைக்கு மட்டும் வெளிய செல்ல முடியுமென கூறப்பட்டுள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அனைவரதும் ஒத்துழைப்பும் கிடைத்தால் மட்டுமே இத்தொற்றை கட்டுப்படுத்த முடியும்.சில பொதுஇடங்களில் இத்தொற்று அபாயம் நீடிக்கிறது. அவ்விடங்களுக்கு செல்லும்போது பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி பேணி, தொற்று நீக்கி திரவம் பாவிக்க வேண்டும்.

தற்போது தொற்றாளர்களை பராமரிக்க பலமான ஆளணி பலம் தேவை.ஆளணிப் பலம் பலவீனமடைந்து சென்றால் எதிர்காலத்தில் பாரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும். எனவே தம்மையும் தமது குடும்ப உறவுகளையும் சமூகத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும். இதற்கு மிகுந்த விழிப்புணர்வு அவசியம்.
புதிய சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கைநிலையை மாற்றி செயற்படுவதுடன் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஒத்துழைக்க வேண்டுமெனகேட்டுக்கொள்கிறேன்.

மேலும் பொதுமக்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக மட்டுமே முககவசம் அணியாது தம்மையும் சமுகத்தையும் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்த விரும்புகிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 58 = 59

Back to top button
error: