crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொரோன டெல்டா வைரஸ் அதிதீவிரமானது என எச்சரிக்கை

இந்தியாவில் உருவாகிய டெல்டா ரக வைரசு தற்போது 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் முன்னர் தெரிவித்தது.

தற்போது இந்த ரகத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கும் நாடு சீனா. முக்கிய நகரங்களில் சீனா கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. சீனாவின் நான்ஜிங் மாகாணத்தில் 200-க்கும் மேற்பட்ட டெல்டா வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

டெல்டா ரகம் என்பது மனித குலத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. இதனை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. புதிதான ஓர் அபாயகரமான ரகம் வருவதற்கு முன்னால் நம்மை நாம் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் பணிப்பாளர் மைக்கேல் ரையான் தெரிவித்துள்ளார்.

தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவிய மூன்றுமே நமது உயிரைக் காக்கும்.

பொருளாதாரத்தில் முன்னேறிய மற்றும் பின்னுக்குத் தள்ளப்பட்ட அனைத்து நாடுகளுமே டெல்டா ரகத்தால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ரகத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, ‘கொரோனா வைரஸ் பிறழ்வு அதிகம் பரவும் தன்மைக் கொண்டது. கொரோனா வைரஸின் இதுவரை இல்லாத பிறழ்வை விடவும் இதுவே அதீ தீவிரத்தன்மைக் கொண்டது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையத்தை மேற்கோள் காட்டி த நியூயோர்க் டைம்ஸ்’ டெல்டா ரகம் தொடார்பாக குறிப்பிட்டுள்ளது.

மேர்ஸ், சார்ஸ், இபொல்லா, சாதாரண காய்ச்சல் மற்றும் சின்னம்மை போன்வற்றையும் விட டெல்டா வைரஸ் அதிதீவிரமானது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 5 =

Back to top button
error: