crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் இன்று 1,940 கொவிட்19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இலங்கையில் இன்று (29) காலை வரை   1,940 கொவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர்கள். ஏனைய 1,919 நபர்கள் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள்

அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகபடியாக கொழும்பு மாவட்டத்தில் 596 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும், களுத்துறை மாவட்டத்தில் 382 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 122 பேரும் பதிவாகியுள்ளனர். மீதி 669 பேர் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் -19 பரவுவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை (29) வரை இலங்கையில் மொத்தம் 301,831 கொவிட் -19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 192,173 பேர் புத்தாண்டுக்குப் பின்னர் இணங்காணப்பட்டவர்கள்.

இன்று அதிகாலை 06.00 மணி வரை 1,499 பேர் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று ஹோட்டல்கள் மற்றும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் 67 தனிமைப்படுத்தல் மையங்களில் 3,402 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இன்று (29) அதிகாலை 0600 மணி வரை (கடந்த 24 மணி நேரத்தில்) 697 பேர் 18 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து தனிமைப்படுத்தல் நிறைவின் பின் வீடு திரும்பினர்.

ஜூலை (27) ம் திகதி வரை இலங்கையில் கொவிட் – 19 வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆகும் அவர்களில் 28 பெண்களும், 63 ஆண்களும் உள்ளடங்குவர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 44 + = 52

Back to top button
error: