கண்டி − பேராதனை பிரதேச பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரண்டு தடவைகள் மொடர்னா கொவிட்19 தடுப்பூசி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அப் பெண் மயக்கமடைந்த நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று (21) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி உட பேராதனை கொரோனா தடுப்பூசி நிலையத்தில்,குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது
பேராதனை ஒகஸ்டாவத்தை பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாய் ஒருவருக்கே, ஒரே நாளில் இரு தடவைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர், பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.