இலங்கையில் 12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட்19 தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிக்கையில் ,
நாம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் கொவிட் 19 தடுப்பூசியை வழங்கினோம். இதனைத்தொடர்ந்து 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி ஏற்றப்படுகிறது.18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தற்போது தடுப்பூசி ஏற்றப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக 12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பிலும் நாம் தற்போது கவனத்திற்கொண்டுள்ளளோம். தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை முறையாக முன்னெடுக்க வேண்டும் என்பதினாலேயே இவ்வாறு நடவடிக்ககைளை முன்னெடுத்துவருகின்றோம். தடுப்பூசியை வழங்குவதற்கு பணம் இல்லை என்ற பிரச்சினை எதுவும் இல்லை என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஜரோப்பா , அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இவ்வாறே செய்யப்படுகின்றன.உலக சுகாதார அமைப்பு தடுப்பூசிக்கான வழிகாட்டிகளை வழங்கியுள்ளது. அதற்கமைவாக நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம் என்றும் மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் கூறினார்.