உள்நாடுபிராந்தியம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட சினோபாம் கொவிட் தடுப்பூசி

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றுவரும் நிலையில் முதல் கட்ட தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (16) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு கிடைக்கப்பட்டுள்ள 50,000 தடுப்பு ஊசிகளில் முதல் கட்டமாக போடப்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் ஏற்றும் நடவடிக்கையானது இன்று பிராந்திய சுகாதார பணிமனை மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை உள்ளிட்டோர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியினை ஏற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.