crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை பள்ளிவாசல் தொழுகைக்கான சுகாதார வழிகாட்டி

இலங்கை வக்ப் சபை 15/07/2021 தேதியிட்ட சுகாதார அமைச்சின் சுற்றறிக்கை இல. DGHS / Covid 19/347/2021 இன் அடிப்படையில் அனைத்து பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் வணக்கவாளிகளையும் பின்வரும் வழிகாட்டுதல்களை மிகவும் கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்துகிறது

1. எந்த நேரத்திலும் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வழிபாட்டாளர்கள் 100 (நூறு மட்டும்) அனைத்து கோணங்களிலிருந்தும் தனி நபர்களிடையே ஒரு மீட்டர் உடல் தூரத்தை பேணுதல் வேண்டும்.
2. வரிசைகள் (சப்f) இடையே ஒரு வரிசை (சப்f) இடைவெளி இடப்பட்டு தொழுகைகள் நடத்தப்பட வேண்டும்.
3. ஜும்ஆ தொழுகையில் குத்பா மற்றும் தொழுகை 30 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
3. பள்ளிவாயலில் அனைவரும் எல்லா நேரங்களிலும் முகமூடி அணிய வேண்டும்.
4. தொழ வருபவர்கள் தங்களது முஸல்லாக்களை கொண்டு வர வேண்டும்
5. தொழுகைக்காக வீட்டிலிருந்து விழூ செய்து கொண்டு வர வேண்டும்.
6. பயணிகளுக்கு வெளி ஊர் பள்ளிவாயல்களில் தொழுவதற்கு அனுமதி இல்லை.
7. காய்ச்சல், இருமல், தடுமல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் போன்றவை உள்ளவர்கள் பள்ளிவாயல்களுக்கு செல்லக்கூடாது.
8. கை குழுக்குதல் அல்லது கட்டியணைத்தல் (முஸாபஹா செய்தல்) போன்றன தவிர்க்கப்பட வேண்டும்.
9. பள்ளிவாயல் மற்றும் அதனைச் சூழ வெறுமனே சுற்றித் திரிதல் தவிர்க்கப்படல் வேண்டும்
10. மேற் குறிப்பிடப்பட்ட சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட வேண்டும்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 50 − 48 =

Back to top button
error: