உள்நாடுபிராந்தியம்
முல்லைத்தீவில் நெல் விளைச்சல் மதிப்பீடு தொடர்பான கருத்தரங்கு
முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் விளைச்சலை மதிப்பீடு செய்யும் அளவீடு தொடர்பான கருத்தரங்கொன்று துறைசார் உத்தியோகத்தர்களுக்கு இடம்பெற்றுள்ளது
முல்லைத்தீவு மாவட்ட விவசாய விரிவாக்கல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நெல் விளைச்சலை மதிப்பீடு செய்யும் அளவீடு தொடர்பான கருத்தரங்கு மாவட்ட செயலக புள்ளிவிபரவியல் கிளையின் ஏற்பாட்டில் பண்டார வன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது.
குறித்த பயிற்சிப்பட்டறையின் வளவாளராக மாவட்ட புள்ளிவிபரவியளாளர் ஆர். ராஜசூரி அவர்கள் கலந்து கொண்டார்.