crossorigin="anonymous">
உள்நாடுபொது

மட்டக்களப்பில் 12,000 ஆசிரியர்ககளில் 7000 பேருக்கு கொவிட் தடுப்பூசி

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 65024 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 12000 ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களில் 7000 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் இன்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 79 கொவிட்19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் மூன்றாவது அலையில் 6356 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

“மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 79 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேரும், செங்கலடி பகுதிகளில் 14 பேரும், களுவாஞ்சிகுடியில் 11பேரும், ஏறாவூர், வாழைச்சேனை, காத்தான்குடி ஆகிய பகுதிகளில் தலா 06 பேரும், பட்டிப்பளை, ஆரையம்பதி போன்ற பகுதிகளில் தலா மூன்று பேரும், கிரான், ஓட்டமாவடி பகுதிகளில் தலா ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 7339 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் 946பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மூன்றாவது அலையில் இதுவரையில் 6356 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 91 பேர் மரணமடைந்துள்ளனர்.

கடந்த மாதம் 3387 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் கடந்தவாரம் 593 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மாமாங்கம் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 50 ஆயிரம் கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றன. அதில் 370024 தடுப்புசிகள் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட தடுப்புசியானது 14981 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 72 + = 79

Back to top button
error: