crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஆளும் கட்சியின் துணை கொறடா சட்டத்தரணி சாகர காரியவசம்

ஆளும் கட்சியின் துணை கொறடா பதவிக்கு நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று (08) அதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து பாராளுமன்றத்தில் வைத்து பெற்றுக் கொண்டார்.

பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து இந்நியமனக் கடிதம் வழங்கிவைக்கப்பட்டதுடன் இதற்கு முன்னதாக ஆளும் கட்சியின் துணை கொறடாவாக பதவி வகித்த ஜயந்த கொட்டகொட, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் சட்டத்தரணி சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரதமரின் மேலதிக செயலாளரும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவின் செயலாளருமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 72 = 77

Back to top button
error: