crossorigin="anonymous">
உள்நாடுபொது

2021 ஏப்ரல் 21 பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் குழுவின் அறிக்கை கையளிப்பு

2021 ஏப்ரல் 21ஆம் திகதி பாராளுமன்றத்தின் சபா மண்டபம் மற்றும் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அதன் தலைவர் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியண் நேற்று (06) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களிடம் கையளித்தார்.

இந்தக் குழுவின் உறுப்பினர்களானச் செயற்பட்ட அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, இக்குழுவின் செயலாளராகச் செயற்பட்ட பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி ஏற்பட்டது போன்று குழுப்பமான சூழ்நிலை மீண்டும் பாராளுமன்றத்தில் ஏற்படாதிருப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை பரிந்துரைப்பதற்காக ரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வல்ல, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், ஆர்.எம்.ரஞ்சித் மத்துமபண்டார, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாகச் செயற்பட்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 26 − 24 =

Back to top button
error: