crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு ‘DATA PACKAGE’

மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு வலயங்களில் உள்ள மாணவர்களின் இணையவழி கற்றலை இலகுபடுத்தும் நோக்கில் மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் ‘DATA Package’ தேவையான 4000 மாணவர்களுக்கு ‘Data Package’ வழங்கும் நிகழ்வு நேற்று (06) மட்டக்களப்பு வின்சென் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இணையவழி கல்வியை பெறுவதில் சிரமப்படும் அதிகஸ்ட பிரதேசங்களில் உள்ள மாணவர்களை இனங்கண்டு குறித்த மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கான இலவச ‘Data Package’ வழங்கப்பட்டதுடன் குறித்த திட்டத்தில் முதற் கட்டமாக 4000 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக லயன்ஸ் கழகத்தின் பிராந்திய தலைவர் க.லோகேந்திரன், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி பிள்ளைநாயகம், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திமதி.சுஜாதா குலேந்திரகுமார், மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் செல்வி.அகிலா கனகசூரியன், மட்டக்களப்பு கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் திரு.தினகரன், பங்குதாரர்களான Dialog, Airtel, Mobitel ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர்கள், பிராந்திய முகாமையாளர்கள், வின்சன் தேசிய பாடசாலை அதிபர் தவதிருமகள் உதயகுமார் மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 62 − = 55

Back to top button
error: