crossorigin="anonymous">
உள்நாடுபொது

“கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்” திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில்

அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக இலங்கை பாராளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு

“கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு பாராளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய செயற்படுவது பொருத்தமானது என பிரதமர் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

இதற்கு மேலதிகமாக இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (திருத்தம்) சட்டமூலத்தை திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இக்குழு அனுமதி வழங்கியது.”

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, இந்திக அநுருத்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரமித பண்டார தென்னகோன், ஜயந்த கடகொட, சம்பத் அதுகோரல, மிலான் ஜயதிலக, கருணாதாச கொடித்துவக்கு, பிரேம்நாத்.சீ தொலவத்த, கோகிலா குணவர்தன மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 8

Back to top button
error: