
சுகாதார சிபார்சுகளுக்கு அமைய 100 மாணவர்களுக்கும் குறைந்த 2962 பாடசாலைகளில் இம் மாதத்திற்குள் கல்வி நடவடிக்கைகளை முழுமையான ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
மாணவர்கள் எண்ணிக்கை 50 ஐ விடக் குறைந்த சுமார் ஆயிரத்து 439 பாடசாலைககள் மற்றும் 51-100 வரையான எண்ணிக்கையைக் கொண்ட ஆயிரத்து 523 பாடசாலைகளுமாக மொத்தமாக 2 ஆயிரத்து 962 பாடசாலைகள் இவ்வாறு இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலைகளை ஆரம்பித்த பின் வருகை தரும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமானது என்பதை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் கூறினார்.
முதற்கட்டமாக இந்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஏனைய பாடசாலைகளை உரிய திட்டத்திற்கு அமைய திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்