crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் யாழ் மாவட்டத்திற்கு விஜயம்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மொஹமட் சாட் கட்டாக் (Excellency Maj.Ge.(Retd).Muhammad Saad Khattak) அவர்கள் இன்றைய தினம் (30) யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மொஹமட் சாட் கட்டாக் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களை யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் மாவட்ட செயலாளர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் மற்றும் மாவட்ட மட்ட உத்தியோகத்தர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தின் தற்போதைய சமகால அபிவிருத்தி ,சமூக பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பான மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் விரிவாக எடுத்துக் கூறினார்.

இந்நிலையில் இங்கு கருத்து தெரிவித்த இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்

” யாழ் மாவட்டத்தில் முதலீடுகளை கவரக்கூடியதாக பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்குவது அவசியம் எனவும் பாகிஸ்தான் ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக இருந்தபோதிலும் இலங்கையுடன் நல்லுறவை உறவைப் பேணி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பாகிஸ்தான் இலங்கைக்கு தொழில்நுட்ப உதவி திட்டத்தின் கீழ் 300 புலமைப்பரிசில் திட்டங்களை வழங்குவதாகவும் அதனைப் பெற்று சிறந்த முறையில் பயனடைய வேண்டும் என தெரிவித்ததுடன் பாகிஸ்தான் இலங்கையின் வளர்ச்சிக்கு எப்போதும் கைகொடுத்து உதவும்” என தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், மாவட்ட உதவிச் செயலாளர், மாவட்ட கமநல திணைக்கள உதவி ஆணையாளர், மற்றும் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 1 =

Back to top button
error: