crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலதா மாளிகைக்கு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (26)  கண்டி வரலாற்று முக்கியத்துவமிக்க தலதா மாளிகைக்கு விஜயம் செய்து மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.

தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை, தியவடன நிலமே நிலங்க தேல அவர்கள் வரவேற்றார் பின்னர், மல்வத்தை மஹா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து, நலன் விசாரித்தார். மஹாநாயக்க தேரர் அவர்கள், பிரித் பாராயணம் செய்து, ஜனாதிபதி அவர்களை ஆசிர்வதித்தார்.

மல்வத்தைப் பீடத்தின் அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் அவர்களையும் சந்தித்த ஜனாதிபதி அவர்கள், தேரர் அவர்களின் நலன் விசாரித்தார். அனுநாயக்க தேரர் அவர்களுக்காக இலங்கைக் கடற்படையின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் சங்கவாசக் கட்டிடத்தையும், ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்த தேரரையும் சந்தித்த ஜனாதிபதி அவர்கள், தேரர் அவர்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

நாட்டின் தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து, மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் இதன்போது விளக்கினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 69 − = 61

Back to top button
error: