இலங்கையில் இயங்கி வரும் நுண்நிதி (microfinance) நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
சில நுண்நிதி நிறுவனங்கள் நாட்டிற்கு புற்று நோயாக மாறியுள்ளதாகவும், மத்திய வங்கியின் ஊடாக அன்றி தனியான நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதன் ஊடாக அந்த நிறுவனங்களை கண்காணிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.