crossorigin="anonymous">
உள்நாடுபொது

அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்குப் புதிய உறுப்பினர்கள் நியமனம்

கமத்தொழில், பெருந்தோட்டக் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு

இலங்கை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112(1) இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பவற்றுக்கு அமைவாக, கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (28) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கமைய, கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, கௌரவ பழனி திகாம்பரம், கௌரவ சிவஞானம் சிறீதரன், கௌரவ வருண லியனகே, கௌரவ சம்பத் அதுகோரல, கௌரவ திஸகுட்டி ஆரச்சி, கௌரவ உதயகாந்த குணதிலக்க, கௌரவ குலசிங்கம் திலீபன், கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ மற்றும் கௌரவ எம். ராமேஷ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: