crossorigin="anonymous">
உள்நாடுபொது

துமிந்த சில்வா ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

பொது மன்னிப்பு வழங்கும்போது உரிய செயல்முறை பின்பற்றப்பட்டதா? - சட்டத்தரணிகள் சங்கம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (24) முழு நோன்மதி தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்ம பிரோமசந்திரவின் கொலை வழக்கில் மரண தண்டனை அனுபவித்து வந்த நிலையிலேயே இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும்போது உரிய செயல்முறை பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விளக்கம் அளிக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான சூழ்நிலைகள் மற்றும் மன்னிப்பு பெற அவர் எப்படி தகுதியானவர் என்பதற்கு குறித்த சில்வா தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 17 = 24

Back to top button
error: